பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்

0 3752

ப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில், ஒரு வெண்கலப் பதக்கமும் உடன் இணைந்துள்ளது.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் நிஷாத் குமார், ராம் பால்  ஆகியோர் பங்கேற்றனர். இதில், ராம் பால் அதிகபட்சமாக 1.94 மீட்டர் தாண்டி 5ஆவது இடம் பிடித்த நிலையில்,  நிஷாத் குமார், அதிகபட்சமாக 2.06 மீட்டர் உயரம் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அமெரிக்காவின் ரோடெரிக் டவுன்சென்ட் அதிகபட்சமாக 2.15 மீட்டர் தாண்டி உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றினார். இதேபோல் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments