சென்னையில் ஐ -போன் நிறுவனம் பெயரில் போலி செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை

0 1933
சென்னையில் ஐ -போன் நிறுவனம் பெயரில் போலி செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை

சென்னையில் ஐபோன் நிறுவனத்தின் பெயரில் போலி உதிரிபாகங்களை விற்பனை செய்த இரண்டு செல்போன் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரும்பாக்கம் பகுதியில் 2 செல்போன் கடைகளில் ஐ- போன் நிறுவனத்தின் பெயரில் போலியான உதிரி பாகங்கள் தயாரித்து விற்கப்படுவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் வந்து பதிவானது.

புகாரில் குறிப்பிடப்பட்ட பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது, திருக்குமார் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஐபோன் நிறுவனம் மட்டுமின்றி வேறு சில பிரபலமான செல்போன் நிறுவனங்களின் போலி உதிரிபாகங்களையும் விற்றது தெரியவந்தது.

2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார்,  நூற்றுக்கணக்கில் போலி உதிரிபாகங்களையும் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments