மனத்தின் குரலில் பிரதமர் மோடி- இளைஞர்களின் தொழில் ஆர்வத்திற்கு பாராட்டு

0 3168

டர்பாடுகளை எதிர்கொண்டு, ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்க இளைஞர்கள் ஆர்வமாக உள்ளதாகவும், புதிய இலக்குகளுடன், இளைஞர்கள் புதிய பாதைகளை உருவாக்குவதாகவும் பிரதமர் மோடி உரை தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் என்ற தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 80 ஆவது உரையை மோடி நிகழ்த்தினார்.

அப்போது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை பாராட்டிய மோடி, இந்திய பொம்மைகள் மூலம் உலகச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த இளைஞர்கள் உறுதிபூண்டுள்ளதாக கூறினார். 

உலக சந்தைகளில் பொம்மைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாகலாம் என மோடி நம்பிக்கை தெரிவித்தார். பொம்மைகள் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை பரிசோதித்து பார்க்குமாறு அவர் ஆலோசனை கூறினார்.

இன்றைய இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளின் மீது ஆர்வமாக உள்ளதால், கிராமங்கள்தோறும் விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, இந்தியா விளையாட்டு போட்டிகளில் உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்றார் மோடி.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகளை தெரிவித்த மோடி, ஒவ்வொரு பதக்கமும் சிறப்பானது என்றார்.

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா உற்சாகமாக பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர்  இந்தியா முழுவதும் விளையாட்டுகள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மிகம் உலகளவில் பிரபலமடைந்து வருவதாக மோடி பெருமிதப்பட்டார். நாட்டில் 62 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கொரோனா வழிகாட்டு  நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மோடி மக்களை கேட்டுக் கொண்டார்.

தமது உரையின் போது சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை மோடி வெகுவாக பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments