சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் புதுச்சேரியில் 3 கிராமங்களில் 144 தடை

0 1683
சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் புதுச்சேரியில் 3 கிராமங்களில் 144 தடை

புதுச்சேரியில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி எல்லையை ஒட்டிய கடலூர் மாவட்ட கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுதியுள்ளனர்.

புதுச்சேரி நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் ஆகிய மீனவ கிராம மக்கள் இடையே சுருக்கு மடி வலை பிரச்னை தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டு, போலீசார் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கும் நிலை உருவானது.

இதனையடுத்து அந்த 3 கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் நல்லவாடு கிராமத்தின் ஒரு பகுதி தமிழக எல்லையில் வருகிறது.

அதனால் அங்கு கடலோர காவல் படையினர் மற்றும் மீன் வள பாதுகாப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களிலுமே போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments