காபூலில் இருந்து ஆட்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க ராணுவம்

0 2059
காபூலில் இருந்து ஆட்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க ராணுவம்

காபூலில் இருந்து ஆட்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்திற்குள் அமெரிக்காவால் மீட்கப்பட வேண்டியவர்களில் கடைசியாக உள்ள 1000 பேர் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் எப்போது அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது முடிவாகாத நிலையில், வரும் செவ்வாய் கிழமைக்குள் ராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்பதில் அதிபர் ஜோ பைடன் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சிவிலியன்கள் அனைவரும் மீட்கப்பட்ட பின்னர் அமெரிக்க துருப்புகளும் படிப்படியாக வெளியேறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது 4 ஆயிரத்திற்கும் குறைவான அமெரிக்க படையினர் மட்டுமே காபூல் விமான நிலையத்தில் உள்ளனர்.

இவர்களில் எத்தனை பேர் அமெரிக்கா திரும்புவார்கள், எத்தனை பேர் காபூலில் தொடர்ந்து இருப்பார்கள் என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

இதனிடையே காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள தாலிபன்கள், அதற்காக அமெரிக்காவின் இறுதி அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments