கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் - தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

0 3039
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் - தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி, தேனி மாவட்டம் போடிமெட்டு சோதனை சாவடி, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments