ஆப்கனில் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கும் நவீன ஆயுதங்கள்...இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

0 15061
ஆப்கனில் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கும் நவீன ஆயுதங்கள்...இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நவீன ராணுவ தளவாடங்களை ஆப்கனில் விட்டு விட்டு அமெரிக்க ராணுவம் நாடு திரும்பும் நிலையில் அவை தாலிபன்கள் மற்றும் பாகிஸ்தான் ஜிஹாதி அமைப்புகளான ஹக்கானி போன்ற பயங்கரவாதிகளின் கைகளில் கிடைத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்ற கவலை எழுந்துள்ளது.

ஏகே 47 துப்பாக்கிகள், இரவு நேரத்திலும் தாக்குதல் நடத்த உதவும் நைட் விஷன் கருவிகள் உள்ளிட்ட பல நவீன ஆயுதங்கள்  ஜெய்ஷே முகம்மது, லஷ்கரே தொய்பா உள்ளிட்டவற்றுக்கு கிடைத்தால், காஷ்மீரை குறிவைத்து அவர்கள் நடத்தும் தாக்குதல் அதிகரிக்க கூடும். அமெரிக்கர்கள் விட்டுச் செல்லும் Blackhawk ஹெலிகாப்டர்கள், அனைத்து விதமான தளங்களிலும் இயங்கும் ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை வைத்து தீவிரவாதிகளால் இந்தியாவின் நீண்ட கடலோரப்பகுதிகளில்  தாக்குதல் நடத்தப்படவும் வாய்ப்புள்ளது.

எனவே அது போன்ற நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள கடலோர காவற்படையும், விமானப்படையும்  பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கனில் அமெரிக்க படைகள்  இல்லாத நிலையில், இந்தியாவின் பாதுகாப்பில் ஏற்பட வாய்ப்புள்ள தாக்கம் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் ஆகியன குறித்து முப்படை தலைமை தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இந்த வாரம் அரசிடம் விளக்கம் அளிக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments