தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 2806

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு பருவக் காற்று காரணமாக நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், வட தமிழ்நாடு மற்றும் ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவையில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரியில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்.

1, 2 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.  பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கேரள, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு  2 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments