மதுபோதையில் உயிரிழந்த மகன் : துக்கம் தாங்காமல் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

0 4438

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் மறுநாளே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்பட்டி கிராமத்தில் பெரியதாய் என்பவரது மகன் திருமலைக்குமார் நேற்றிரவு அங்குள்ள ஒரு தோட்ட கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது அருந்திய நிலையில், போதை தலைக்கேறியதில் கிணற்றுக்குள் நிலைத்தடுமாறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த பெரியதாய் தனது சொந்த தோட்ட கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். மதுவால் ஒரு குடும்பமே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments