இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,083 பேருக்கு கொரோனா தொற்று ; 31,265 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல்

0 2181
24 மணி நேரத்தில் 45,083 பேருக்கு கொரோனா தொற்று

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 45 ஆயிரத்து 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில், 31 ஆயிரத்து 265 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 265 பேர் நோயில் இருந்து குணமடைந்தனர். 460 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 97 புள்ளி 63 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியை தாண்டிவிட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments