பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனாவுக்கு வெள்ளிப் பதக்கம்

0 3579
பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனாவுக்கு வெள்ளிப் பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் Ying Zhou-வை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் பவீனா பட்டேல் 7-க்கு 11, 5-க்கு 11, 6-க்கு 11 என்ற நேர் செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார். இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியதால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்திய பதக்க பட்டியலை தொடங்கி வைத்த பவீனா பட்டேலுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments