பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் 2 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல் - நான்கு பேர் கைது

0 2290
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் 2 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல் - நான்கு பேர் கைது

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கோபால் தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது அங்கிருந்த ஒருவர் செல்போனில் பொட்டலம் வந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த கோபால் அந்த நபரை கோயம்பேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.  விசாரணையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் குட்கா கடத்தி வருவது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பேருந்தை மடக்கி பிடித்த போலீசார், அதில் இருந்த  2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments