சென்னையில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும்... வியாபாரிகளுக்கு 10 நாள் கெடு விதித்தது சென்னை மாநகராட்சி

0 3381
சென்னையில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும்... வியாபாரிகளுக்கு 10 நாள் கெடு விதித்தது சென்னை மாநகராட்சி

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை 10 நாட்களுக்குள் கடைகளில் இருந்து அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங்பேடி வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகள் மீது இதுவரை 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், குப்பைகளில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி பயன்படுத்துவதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments