சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசினால் இனி நடவடிக்கை… எச்சரிக்கும் முதலமைச்சர்

0 3126

சட்டப்பேரவையில் தலைவர்களை புகழ்ந்து பேச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பேரவையில் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஐயப்பன், முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள், சாதனைகள் மற்றும் அவரை பெருமைப் படுத்தும் விதமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரத்தின் அருமை கருதி திமுக உறுப்பினர்கள் தலைவர்களை புகழ்ந்து பேசுவதை குறைத்து மானியக்கோரிக்கை விவாதத்தில் பேச வேண்டும் என கூறினார்.

நேற்றைய தினமே இது தொடர்பாக கட்டளையிட்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர், இனியும் தலைவர்களை புகழ்ந்து நேரத்தை வீணடித்தால் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments