மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்

0 1916
மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்தப் பணியை ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்படும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் எனத் திருவாடானைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அதிகமுள்ளதாகவும், இவற்றால் விளைநிலம் தரிசாவதாகவும் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments