ஆப்கானிஸ்தானில் மருத்துவமனைகளில் தேவை ஏற்பட்டதால் பெண் பணியாளர்களுக்கு தாலிபான்கள் அழைப்பு

0 2297

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனைகளில் தேவை ஏற்பட்டுள்ளதால் மருத்துவத் துறைப் பெண் பணியாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பும்படி தாலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அவர்களுக்கு அஞ்சிப் பெண் பணியாளர்கள் பணிக்கு வர மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் செவிலியர், ஊழியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து மருந்துகள், மருத்துவக் கருவிகள் வரத்து தடைபட்டுள்ளதால் அவற்றுக்கும் தட்டுப்பாடு நீடிக்கிறது.

இந்நிலையில் மருத்துவத் துறைப் பெண் பணியாளர்கள் பணிக்குத் திரும்பத் தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments