தாலிபான் அரசை விரைந்து அங்கீகரிக்கப்போவதில்லை - அமெரிக்கா

0 2371
தாலிபான் அரசை விரைந்து அங்கீகரிக்கப்போவதில்லை - அமெரிக்கா

தாலிபான் அரசை அமெரிக்காவோ, அதன் கூட்டணி நாடுகளோ விரைவாக அங்கீகரிக்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை விரைந்து அங்கீகரிக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். அங்கிருந்து படைகளை விலக்கிக் கொண்ட பின்னர் தூதரகச் செயல்பாட்டைத் தொடர்வதா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆப்கனில் பயங்கரவாதத்துக்கு இடங்கொடாதது, மனித உரிமைகள், பெண்கள் உரிமைகளை மதிப்பது ஆகிய செயல்பாடுகளின் மூலமே அதை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் அமெரிக்கா ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments