தமிழ்நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றுகளில் 80 விழுக்காடு டெல்டா வகைத் தொற்றாக உள்ளது - ராதாகிருஷ்ணன்

0 2906
தமிழ்நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றுகளில் 80% டெல்டா வகைத் தொற்று

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் 80 விழுக்காட்டினருக்கு டெல்டா வகை தொற்று எனக் கண்டறிப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா மரபியல் மாற்றங்களை ஆய்வு செய்து கண்டறியும் மரபணு ஆய்வகம் சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்க வரும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments