செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 3268

சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி செப்டம்பர் முதல் நாளில் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமைச் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரே மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என்றும், விடுதிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்லூரிகளுக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments