இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல, நாங்கள் இருக்கிறோம் - முதலமைச்சர்

0 2700
இலங்கை அகதிகள் என்று நேற்று நான் தவறுதலாகக் கூறிவிட்டேன்

இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இன்று முதல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்.

அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்காக முதலமைச்சர் நேற்று வெளியிட்ட அறிவிப்புகளை உறுப்பினர் பூண்டி கலைவாணன் பாராட்டி பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர் பேசியது போலவே தானும் நேற்றைய தினம் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்றே குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.

இன்று முதல் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்றும், அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல,  அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என குறிப்பிட்ட முதலமைச்சர், இலங்கைத் தமிழர்கள் நலனில் அரசு உறுதியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments