ஆப்கானிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா ட்ரோன் மூலம் தாக்குதல்: முக்கியத் தீவிரவாதியைக் கொன்றதாக அறிவிப்பு

0 2521

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ் கோரேசன் தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி முக்கியத் தீவிரவாதியைக் கொன்றதாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். கோரேசன் தீவிரவாதிகள் முகாம்கள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தின. ஆளில்லா டிரோன்கள் மூலம் அமெரிக்க ராணுவம் தீவிரவாதிகள் மீது நள்ளிரவில் குண்டுமழை பொழிந்தது. இதில் காபூல் குண்டு வெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது.

காபூலில் மேலும் குண்டுவெடிப்பு நடத்த தீவிரவாதிகள் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அதைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா விளக்கியுள்ளது. காபூல் குண்டுவெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

இதனிடையே காபூல் விமான நிலையம் வாயில் அருகே மேலும் குண்டுகள் வெடிக்கலாம் என்பதால் உடனடியாக விலகிச் செல்லுமாறும் அமெரிக்க ராணுவம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments