ஜெர்மனியில் இருந்து பார்சல் மூலம் போதைப் பொருள் கடத்தல்... பெண் கைது, போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? - போலீசார் விசாரணை

0 2625

ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல் மூலம் போதைப் பொருள் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த குறிப்பிட்ட பார்சலில் போதை பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட பார்சலை பிரித்து பார்த்த போலீசார் ஒரு கிலோ அளவிலான எம்.டி.எம்.ஏ வகை போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

பார்சலை பெற வந்த பெண்ணை மடக்கிப் பிடித்த போலீசார் ஏதேனும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments