ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் மீட்பு: அமெரிக்க அதிபர் மாளிகை தகவல்

0 1587

கடந்த 12 மணி நேரத்தில் காபூலில் இருந்து 4 ஆயிரத்து 200 பேரை மீட்டிருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் கூடுதலான விமானங்களை அமெரிக்கா காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளது. விரைவாக அனைவரையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மீட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31க்குப் பிறகு அமெரிக்க ராணுவ வீரர்கள் யாரும் காபூலில் இருக்க மாட்டார்கள் என்றும் ஜோ பைடன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments