நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி... பிரதமர் மோடி பாராட்டு

0 1601

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டிருந்த வேளையில் கோவிஷீல்ட், கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தன. இதனையடுத்து தடுப்பூசி இயக்கம் முழுவீச்சில் வேகம் கொண்டது.

கடந்த வியாழக்கிழமையன்று இந்தியா 61 கோடி டோஸ்கள் என்ற இலக்கை எட்டியது சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கணக்கின்படி முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன . நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 62 கோடியை தொட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

இதில் 14 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசின் கோ-வின் இணையதளத்தில் பதிவாகியுள்ளது. இதனிடையே இந்த ஒரு கோடி சாதனை கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் இந்த இயக்கத்தை வெற்றியாக்கியவர்களுக்கும் டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments