நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானிக்கு மாரடைப்பு ; விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்

0 3298
விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பைலட்டுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், அவசர அவசரமாக, நாக்பூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

வங்கதேச விமான நிறுவனமான பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்சுக்குச் சொந்தமான, Boeing ரக விமானம், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, 126 பயணிகளுடன், வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு வந்து கொண்டிருந்தது.

இந்திய வான்பரப்பில், முற்பகல் 11.40 மணியளவில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே விமானம் வந்தபோது, விமானி ஒருவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, கொல்கத்தாவில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மகாரஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments