பாராலிம்பிக் போட்டி நடைபெறுமிடத்தில் மின்சாரப் பேருந்து மோதி விபத்து - கண்பார்வையற்ற ஜூடோ வீரர் படுகாயம்

0 4319
பாராலிம்பிக் போட்டி நடைபெறுமிடத்தில் மின்சாரப் பேருந்து மோதி விபத்து

டோக்கியோ மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுமிடத்தில் தானியங்கிப் பேருந்து மோதியதில் கண்பார்வையற்ற ஜூடோ வீரர் படுகாயமடைந்தார்.

விளையாட்டு வீரர்கள் தங்கியுள்ள இடத்துக்கும் போட்டி நடைபெறும் திடலுக்கும் இடையே டொயோட்டா நிறுவனத்தின் மின்சாரக் கார் இயக்கப்படுகிறது. வியாழனன்று சாலையின் குறுக்கே நடந்த கண்பார்வையற்ற ஜூடோ வீரர் மீது பேருந்து மோதியது.

இந்த விபத்தில் கீழே விழுந்த அவர் தலையிலும் காலிலும் காயமடைந்ததாகவும், குணமடைய இருவாரங்கள் ஆகும் என்றும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மின்சாரப் பேருந்துகளை இயக்கும் டொயோட்டோ நிறுவனம் இதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

ஜூடோ வீரர் ஊன்றுகோல் வைத்திருக்கவில்லை எனினும் பேருந்து தானாக நின்றுவிட்டதாகவும், அவர் சாலைக்கு வரமாட்டார் எனக் கருதிய பேருந்தின் இயக்குநர்கள் மீண்டும் அதை இயக்கியதால் விபத்து நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments