நடிகர் வடிவேல் பட பாணியில் அரிசி சாம்பிள் பார்ப்பதாக கூறி பணம் திருட்டு

0 4161
நடிகர் வடிவேல் பட பாணியில் அரிசி சாம்பிள் பார்ப்பதாக கூறி பணம் திருட்டு

சென்னை கொடுங்கையூரில், அரிசி வாங்குவதாக கூறிக்கொண்டு, கடையில் இருந்த பணத்தை நடிகர் வடிவேல் பட பாணியில் திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த காட்சியில் வருவது போல் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காமராஜர் சாலையை சேர்ந்த கண்ணையா என்பவர் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மனைவி பூஜிதா கடையில் இருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அரிசி வாங்குவதாக கூறி, ஒவ்வொரு மூட்டையிலும் அரிசி Sample பார்த்து, அவருடைய கவனத்தை திசை திருப்பி, கல்லா பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments