வெளிநாடு வாழ் இந்தியர் ஆதார் பெற 6 மாதம் காத்திருக்கத் தேவையில்லை - இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு

0 2322
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆதார் பெற இனி ஆறு மாதம் காத்திருக்கத் தேவையில்லை என்றும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவுடனேயே ஆதாருக்குப் பதிவு செய்யலாம் என்றும் தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு, வணிகம் ஆகியவற்றுக்காக ஓராண்டில் 182 நாட்களுக்கு மேல் வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடிமக்கள் வெளிநாடு வாழ் இந்தியர் என அழைக்கப்படுகின்றனர்.

இத்தகையோர் ஆதார் பெற வேண்டுமெனில் இந்தியாவில் ஓராண்டில் குறைந்தது 182 நாள் குடியிருந்திருக்க வேண்டும் என முன்பு விதி இருந்தது. இந்த விதி தளர்த்தப்படும் எனக் கடந்த ஆண்டு மே மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடுவாழ் இந்தியர் உடனடியாக ஆதார் பதிவு மையத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments