நடிகை மீரா மிதுனின் நீதிமன்றக் காவல் செப். 9-ந் தேதி வரை நீட்டிப்பு

0 2304
பட்டியலினத்தவரை இழிவாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின், நீதிமன்ற காவலை செப்டம்பர் 9-ந் தேதிவரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலினத்தவரை இழிவாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின், நீதிமன்ற காவலை செப்டம்பர் 9-ந் தேதிவரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுனும், அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து இருவரும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீரா மிதுனுக்கும், அவரது ஆண் நண்பருக்கும் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments