கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக உடைந்த பாலத்தில் இருந்து ஒருவர் தப்பி ஓடி வந்த காட்சி..

0 2849
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாலம் சேதமடைந்த நிலையில், அதில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டி ஒருவர் தப்பி ஓடி வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாலம் சேதமடைந்த நிலையில், அதில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டி ஒருவர் தப்பி ஓடி வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டேராடூனில் உள்ள Jakhan ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக Ranipokhariயில் இருந்து Rishikesh செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.

அதில் இரண்டு, சரக்கு வாகனங்கள் சிக்கிக்கொண்ட நிலையில், ஓட்டுநர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments