நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி பார்ட் 2 படத்தின் பிரச்சனை தீர்ந்தது

0 7437
நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி பார்ட் 2 படத்தின் பிரச்சனை தீர்ந்தது

நடிகர் வடிவேலு நடிப்பில், இயக்குநர் ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான பிரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்பட்டு விட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த படத்திற்கு 2017-ல் பூஜை போடப்பட்டு படபிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், இயக்குநர் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, படபிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி பட தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பு சங்கத்தில் புகாரளித்திருந்தார்.

இந்த நிலையில், வடிவேலு மற்றும் இயக்குநர் ஷங்கரின் தரப்பை அழைத்து பேசி பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம், புதிய படங்களில் வடிவேலு இனி தடையின்றி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments