சென்னையில் தொழிலதிபரை கடத்திய விவகாரம் ; கடத்தலுக்கு உதவிய திருமங்கலம் உதவி ஆணையர், ஆய்வாளர் ஹைதராபாத்தில் பதுங்கி உள்ளதாக தகவல்

0 4038
கடத்தலுக்கு உதவிய திருமங்கலம் உதவி ஆணையர், ஆய்வாளர் ஹைதராபாத்தில் பதுங்கி உள்ளதாக தகவல்

சென்னையில் தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை மிரட்டி அபகரிக்க உதவியாக இருந்ததாக எழுந்த புகாரில் சிக்கிய திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாக சிபிசிஐடிக்கு தகவல் கிடைத்துள்ளது.

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முகப்பேரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷை திருமங்கலம் போலீசார் உதவியுடன் கடத்திச் சென்று சீனிவாச ராவ் என்பவர் மிரட்டி சொத்துக்களை அபகரித்தாக புகார் எழுந்தது.

இந்த புகாரில், திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ. பாண்டியராஜன் மற்றும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. உதவி ஆணையர் சிவக்குமாரின் முகலிவாக்கம் வீட்டில் பூட்டை உடைத்து அண்மையில் சோதனை நடத்திய சிபிசிஐடி, அவரையும், ஆய்வாளர் சரவணகுமாரையும் பிடிக்க தனிப்படை அமைத்து ஹைதராபாத் செல்ல உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments