அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 9693
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலத்தில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாளில் தேனி, நீலகிரி, கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கேரள மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு 4 நாட்களுக்கும், அரபிக்கடலுக்கு 3 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments