உலகிலேயே அதிக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ள நகர பட்டியல் ; டெல்லி முதலிடம் , சென்னை மூன்றாமிடம்

0 4042
உலகிலேயே அதிகக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்திய நகரம் டெல்லி

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தியுள்ள நகராக இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்திலும் சென்னை 3வது இடத்திலும் உள்ளன.

அதிக எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவியுள்ள உலகின் 20 நகரங்களை போர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் சராசரியாக ஒரு சதுர மைல் பரப்பளவில் ஆயிரத்து 826 கேமராக்கள் பொருத்தி டெல்லி முதலிடத்தில் உள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒரு சதுர மைல் பரப்பளவில் ஆயிரத்து 138 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு சதுர மைல் பரப்புக்கு 610 கேமராக்களைப் பொருத்திய சென்னை மூன்றாமிடத்தில் உள்ளது.

சாங்காய், சிங்கப்பூர் நகரங்கள் முறையே ஏழாம் எட்டாமிடங்களில் உள்ளன. மாஸ்கோ, நியூயார்க், பெய்ஜிங் நகரங்கள் முறையே 13, 14, 15ஆம் இடங்களில் உள்ளன. சதுர மைலுக்கு 157 கேமராக்களுடன் மும்பை 18ஆவது இடத்தில் உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments