சட்டப்பேரவையில், கருணாநிதியை குறிப்பிட்டு பேசும்போது நா தழுதழுத்த அமைச்சர் எ.வ.வேலு.. மு.க.ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றியதை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தோம் எனவும் உருக்கம்..

0 2696
சட்டப்பேரவையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நா தழுதழுக்க பேசினார்.

சட்டப்பேரவையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நா தழுதழுக்க பேசினார்.

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின் மீதான பதிலுரையில் பேசிய அமைச்சர், கலைஞர் கருணாநிதியை குறிப்பிட்டு பேசும்போது எல்லாம் நா தழுதழுத்தவாறு பேசினார்.

கலைஞர் கருணாநிதி வகித்த பொதுப்பணித் துறையை தனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கலைஞர் கருணாநிதி தான் மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் அந்தஸ்தை பெற்றுத்தந்தார் என்ற எ.வ.வேலு, அண்மையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோட்டையில் கொடியேற்றும் போது நாங்கள் எல்லாம் ஆனந்த கண்ணீர் வடித்தோம் என உருக்கமாக குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments