கொரோனா விதிமுறைகளை மீறி மனைவியின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்றதால் அர்ஜென்டினா அதிபருக்கு சிக்கல்

0 1703
மனைவியின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற அர்ஜென்டினா அதிபர்

அர்ஜென்டினா அதிபர் Alberto Fernandez கொரோனா விதிமுறைகளை மீறி தனது மனைவியின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அர்ஜென்டினாவில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூட கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு July 14ம் தேதி அதிபர் மாளிகையில் Alberto Fernandez தனது மனைவி Fabiola Yanezன் பிறந்தநாள் பார்ட்டியை ஏராளமானோருடன் சேர்ந்து முகக்கவசம் அணியாமல் கொண்டாடிய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments