கேரளம், மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு.. இரவு ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை

0 3438
கேரளத்திலும் மகாராஷ்டிரத்திலும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு இரவுநேர ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

கேரளத்திலும் மகாராஷ்டிரத்திலும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு இரவுநேர ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

வெள்ளியன்று கேரளத்தில் முப்பதாயிரம் பேருக்கும், வியாழனன்று மகாராஷ்டிரத்தில் ஐயாயிரத்து 108 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் காணொலியில் கலந்துரையாடினார். அதில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி மறு ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.

தொற்று அதிகரிப்பைக் கட்டுப்படுத்த இன்னும் அதிக முயற்சிகள் தேவைப்படுவதாகவும், இரவுநேர ஊரடங்கை நடைமுறைப்படுத்தலாமா என்பதைப் பரிசீலிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments