காபூலில் தூதரகத்தில் பணியாற்றிய ஆப்கானியர் விவரங்களை விட்டுவந்த பிரிட்டன் அதிகாரிகள்?

0 2470

காபூலில் இருந்து பிரிட்டன் அதிகாரிகள் வெளியேறியபோது அங்குப் பணியாற்றிய ஆப்கானியர்கள் தொடர்பான ஆவணங்களை விட்டுவிட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு சிதறிக் கிடந்த ஆவணங்களில் தூதரகத்துக்காகப் பணியாற்றிய ஆப்கானியர் 7 பேரின் விவரங்கள் இருந்ததாகவும் தி டைம்ஸ் தெரிவித்துள்ளது. தி டைம்ஸ் செய்தியாளர்கள் அதை பிரிட்டன் வெளியுறவு அதிகாரிகளிடம் வழங்கியதையடுத்து ஆப்கானியர் மூவரையும் அவர்களின் குடும்பத்தினரையும் மீட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

காபூலில் நிலைமை மோசமடைந்ததால் தூதரகத்தை மூடியதாகவும், முக்கியமான ஆவணங்களை அழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments