மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் எம்.எம்.அப்துல்லா முதலமைச்சர் முன்னிலையில், வேட்பு மனு தாக்கல்

0 2222
திமுக சார்பில், ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் எம்.எம். அப்துல்லா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திமுக சார்பில், ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் எம்.எம். அப்துல்லா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ராஜ்யசபா அதிமுக உறுப்பினர் முகமது ஜான் உயிரிழந்ததையடுத்து காலியான அந்த இடத்திற்கு செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்து ஒரு ராஜ்யசபா இடத்திற்கு நடைபெறும் இந்த தேர்தலில், திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் இணை செயலாளராக உள்ள எம்.எம். அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் எம்.எம்.அப்துல்லா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சட்டமன்றத்தில் திமுகவின் பலம், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாதது ஆகிய காரணங்களால் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments