சட்டமுன்வடிவை தாக்கல் செய்யும் போது மூத்த தலைவர்களை புகழ்ந்து பேசக்கூடாது... அமைச்சர்களுக்கு முதலமைச்சர் கண்டிப்பான உத்தரவு

0 2494
சட்டமன்றத்தில் அமைச்சர்கள் சட்ட முன்வடிவை தாக்கல் செய்யும் போது, மூத்த தலைவர்களை புகழ்ந்து பேசுவதையோ, பாராட்டுவதையோ தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டத்துறை தொடர்பான திருத்த மசோதா ஒன்றை அறிமுகம் செய்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக மூத்த தலைவர்கள் பெயர்களை குறிப்பிட்டு புகழ்ந்து பேசி வந்தார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரடியாக சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதற்கான முறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவையின் நேரத்தை வீணடிக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என கண்டிப்புடன் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments