எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மேகதாது விவகாரத்தில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் - அமைச்சர் துரைமுருகன்

0 2326
எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம் குறித்து பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளை சுட்டிக்காட்டி பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மேகதாது விவகாரத்தில் மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதே கோரிக்கையை மற்ற எதிர்க்கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் காவிரி பிரச்சினை, இருமொழி கொள்கை, நீட் விவகாரம், இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆகியவற்றில்  ஒற்றுமையுடன் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் எனவும், எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது எனவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments