கோவையில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏட்டு..

0 8569
கோவையில், 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

கோவையில், 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

சரவணம்பட்டியில்,  பயன்படுத்தப்பட்ட இன்ஜின் ஆயில் விற்பனை செய்யும் கடை வைத்துள்ள ஐயப்பனிடம்,   கீரனத்தம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏட்டு ராஜ்குமார் 2000 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டதோடு, தரவில்லையொன்றால் மண்ணெண்ணய் விற்பதாக போய் வழக்கு போடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐயப்பன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்த நிலையில், ரசாயனம் தடவிய 2ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்ற ராஜ்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments