முகக்கவசத்துடன் அன்லாக் செய்யலாம் ? ஐ-போன் 13ல் புதிய வசதி வர உள்ளதாகத் தகவல்

0 1992

அடுத்து வெளியாக உள்ள புதிய மாடல் ஐ-போனை வாடிக்கையாளர்கள் முகக்கவசத்துடன் அன்லாக் செய்யும் வகையில் வடிவமைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் பிராசசருடன் அடுத்த மாதம் ஐ-போன் 13 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிவதால் ஐ-போனை அன்லாக் செய்ய ஒவ்வொரு முறையும் ஒன்று முகக்கவசத்தை கழற்ற வேண்டும் அல்லது ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்ய வேண்டி உள்ளது.

இந்த சிரமத்தை போக்குவதற்காக வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்தவாறே போனை அன்லாக் செய்யும் வகையில் Face ID தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments