"வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது" போலீசாரை பாட்டு பாடி கலாய்த்த டான்ஸிங் ரோஸ்..!

0 2471

முக கவசம் அணியாமல் இருந்ததால் அபராதம் விதித்த போலீசாரை நோக்கி வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது என பாட்டுப் பாடியுள்ளார் இளம்பெண் ஒருவர்.

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நின்றிருந்த இளம் பெண் ஒருவர், முக கவசம் அணியாமல் இருந்ததால் பயண சீட்டு பரிசோதகர் அபராதம் விதித்துள்ளார். இளம் பெண்ணோ, கையில் வைத்திருந்த முக கவசத்தை அணிந்து கொண்டு, பாட்டுப்பாடி ஆடத் தொடங்கினார்.

நடைமேடையில் பாதுகாப்பு பணிக்காக இருந்த பெண் ஆர் பி எப் வீரர்களை பார்த்து கலாய்த்த படி இளம்பெண் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments