சாலிகிராமத்தில் திரைப்பட இயக்குனர் மகள் கடையில் கொள்ளை

0 2090
சாலிகிராமத்தில் திரைப்பட இயக்குனர் மகள் கடையில் கொள்ளை

சென்னை சாலிகிராமத்தில் திரைப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மகளுக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி உட்பட அடுத்தடுத்த உள்ள கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் முத்துலட்சுமி என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் திரைப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரனின் மகள் என கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்ற ஊழியர்கள் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது மட்டுமின்றி கல்லாவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அதே பகுதியில் உள்ள முருகன் என்பவர் நடத்தி வரும் பல்பொருள் அங்காடியில் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளது. ஆனால் பூட்டை உடைக்க முடியாததால், எதிரே உள்ள மயூரா என்ற ஆடைகள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து பணம் இல்லாத ஆத்திரத்தில் பொருட்களை எல்லாம் சிதறடித்துள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி உதவியுடன் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதே கொள்ளையர்கள் கோடம்பாக்கம் புலியூரில் அடுத்தடுத்து உள்ள 9 கடைகளை உடைத்து கொள்ளையடித்து சென்றது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments