செந்நாய்க் கூட்டத்திடம் குட்டியுடன் சிக்கிக்கொண்ட கடமான் ஜோடி : குட்டியை பறிகொடுத்துவிட்டு, போராடி தப்பிய காட்சிகள்

0 4121

நீலகிரி மாவட்டம் உதகையில் செந்நாய்க் கூட்டத்திடம் சிக்கிய சாம்பர் மான் ஜோடி ஒன்று குட்டியை பறிகொடுத்துவிட்டு, போராடி தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

மார்லி மந்த் அணையை ஒட்டிய பகுதியிலுள்ள நீர்நிலை ஒன்றில் குட்டியுடன் தண்ணீர் குடிக்க வந்த சாம்பர் மான் எனப்படும் கடமான் ஜோடியை 10க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டு வேட்டையாட முயன்றன.

பெரிய மான்கள் இரண்டும் செந்நாய்க் கூட்டத்திடம் போராடி தப்பித்த நிலையில், குட்டி மட்டும் செந்நாய்களிடம் சிக்கிக்கொண்டது. இந்தக் காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் என்ற புகைப்படக் கலைஞர் வீடியோ எடுத்துள்ள\ர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments