Tamil என்பதை Thamizh என மாற்றி அமைக்க வேண்டும் : பேரவையில் எம்எல்ஏ வெற்றியழகன் வலியுறுத்தல்.!

0 2845

ச்சையப்பன் கல்லூரி மற்றும் பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்ப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கி அதனை பல்கலைக்கழகமாக உருவாக்க வேண்டும் என்று வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கையின் போது தனது கன்னிப்பேச்சில், செம்மொழியில் சிறந்த எழுத்தான ழகரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், ஆங்கிலேயர் விட்டுச்சென்ற Tamil என்பதை Thamizh என மாற்றி அமைக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு Glopal warmingஐ தனி பாட பிரிவாக கொண்டு வர வேண்டும் என்றும், மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வகுப்புகள் அமைத்து தர வேண்டும் என்றும் வெற்றியழகன் கோரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments