கொலம்பியாவை வாட்டி எடுத்த கனமழை : ஆறுகளாக மாறிய சாலைகள்

0 2027

கொலம்பியாவில் பெய்த கனமழையால் அங்குள்ள சாலைகள் ஆறாக மாறின. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததுடன், ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடியது.

கொலம்பியாவின் குவராண்டா, சுக்ரி மற்றும் மாண்டேரியா நகரங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. கனமழைக்கு பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானதுடன், ஆயிரக்கணக்கான வீடுகளும் சேதமடைந்தன.வாழைத் தோட்டங்களையும் மழை நீர் மூழ்கடித்த நிலையில், பல இடங்களில் மக்களை மீட்கும் பணிகள் நடக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments