தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது ? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0 1789

மிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கத் தமிழக அரசுக்குச் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான பேருந்துகளை வாங்க உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாத புதிய பேருந்துகளை வாங்கத் தடை விதித்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 10 விழுக்காடு பேருந்துகள் மட்டும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் வாங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டார்.

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகளை வாங்க வேண்டும் என்ற போதும், நிதி நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வங்கிகளிடம் உதவி கோரியுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இது குறித்து விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments