புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி - முதலமைச்சர் ரங்கசாமி

0 2205
புதுச்சேரியில் பயிர் கடன் தள்ளுபடி

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், ஆதிதிராவிட மாணவர்கள் அரசின் பாட்கோ நிறுவனத்தில் வாங்கிய கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும், பழங்குடியின மாணவர்களுக்கு கல்லூரி படிப்பு வரை கல்வி இலவசம் என்ற நடைமுறை தொடரும் எனவும் அறிவித்தார்.

விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கொரோனாவை எதிர்கொள்ள கூடுதலாக 25 கோடி ரூபாயும், ஆயுஷ் மருத்துவமனை கட்ட  795 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு 742 கோடி ரூபாயும், உயர்கல்விக்கு 296 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments